ஐக்கிய
மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் தொகுதி இணை அமைப்பாளராக
புதிய வளத்தாப்பிட்டியைச் சேர்ந்த கட்சி முக்கியஸ்தர் வெள்ளையன்
வினோகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசா நேற்று முன் தினம் வழங்கி வைத்தார்.
பொத்துவில் தொகுதியில் உள்ள திருக்கோவில் ஆலையடிவேம்பு காரைதீவு ஆகிய தமிழ்
பிரதேச செயலகங்களின் ஒட்டுமொத்த கட்சியின் பணிக்காக
இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏலவே
அமைப்பாளர் வெள்ளையன் வினோகாந்த், கட்சியின் அம்பாறை மாவட்ட தமிழ்
பிரதேசங்களுக்கான அமைப்பாளராகவும், தலைவரின் சிங்கள தமிழ் மொழி
பெயர்ப்பாளராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours