(அஸ்ஹர் இப்றாஹிம்)

திருகோணமலை மாவட்ட கட்டைப்பறிச்சான் தெற்கு, கட்டைப்பறிச்சான் வடக்கு, சேனையூர் ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் உள்ள 50 குடும்பங்களுக்கு 200 தென்னங்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.

"நாமே நமக்கு" அமைப்பின் நிதியுதவியுடன் மூதூர் லயன்ஸ் கழகத்தின் ஒருங்கிணைப்புடன்   இச் செயற்றிட்டம்  நடைமுறைப்படுத்தப்பட்டது.   

இந்நிகழ்வில் நாமே நமக்கு அமைப்பின் திருக்கோணமலை மாவட்ட இணைப்பாளர் திரு .அன்பு அவர்களும் மூதூர் யுனைட்டட் லயன்ஸ் கழகத் தலைவர் ஜே.எம்.இஹ்ஸான் அவர்களும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வு  சேனையூர் அனாமிகா கலை பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours