பா.உ கலையரசனின் பல வருட பிரயத்தனத்திற்கு கிடைத்த வெற்றி... பொத்துவில் கனகர் கிராமத்தில் முதற்கட்டமாக மீள்குடியேற்றப்பட்ட 73 குடும்பங்களுக்கு காணி அனுமதிப் பத்திரம் வழங்கி வைப்பு...
மிக நீண்டகாலமாக மக்கள் போராட்டமாகவும், தமிழ்த் தேசிய அரசியற் பிரமுகர்களின் பாரிய பிரயத்தனத்தினமாகவும் இருந்த பொத்துவில் கனகர் கிராமத்தில் மீள்குடியேற்றப்படுகின்ற குடும்பங்களுக்கு காணி அனுமதிப் பத்திரம் வழங்கும் நிகழ்வு இன்று திருகோணமலையில் கிழக்கு மாகாண காணி ஆணையாளர் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர்களான கலையரசன், முஷரப், கபில அதுகோரல, ஐ.பி.சி தமிழ் நிறுவன பணிப்பாளர் பாஸ்கரன், பொதுவில் பிரதேச செயலாளர் உள்ளிட்ட குழுவினர், கனகர் கிராமத்தில் முதற்கட்டமாக மீள்குடியேற்றப்பட்ட பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
பொத்துவில் கனகர் கிராமத்தில் பூர்வீகமாக குடியிருந்து யுத்த காலத்தில் வெளியேறிய மக்களை மீள்குடியேற்றும் முகமாக அப்பிரதேச மக்களால் பல வருடங்களாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதுடன் இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் அவர்களால் பல வருட பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்ததையிட்டு அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் பா.உ திசாநாயக்கா, பொத்துவில் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவர் பா.உ முஷரப் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர், பொத்துவில் பிரதேச செயலாளர் ஆகியோரின் ஒத்துழைப்பின் காரணமாக தற்போது அம்மக்களில் முதற்கட்டமாக பொத்துவில் பிரதேச செயலகத்தினூடாக தேர்வு செய்யப்பட்ட 73 குடும்பங்களுக்கு காணி அனுமதிப்பத்திரம் இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours