(மருதமுனை செய்தியாளர்,
றாசிக் நபாயிஸ்)
சேர்ந்த அரச உத்தியோகத்தர்கள் பூர்த்தி செய்த 150 மணித்தியாலயங்களைக்
கொண்ட சிங்கள மொழிப் பாடநெறிக்கான பிரியாவிடை மற்றும் இறுதி கலை, கலாசார திறன் விருத்தி
நிகழ்வு NILET வளவாளர்
ஐ.எம்.அபுல் ஹசன் அவர்களின் ஒருங்கிணைப்பில் ஆசிரியர் எம்.ஜே.எம்.தில்ஷாதின்
தலைமையில் மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மருதூர் கொத்தன் கலையரங்கில் (11) நடைபெற்றது.
இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கல்முனை பிரதேச செயலக கணக்காளர் கே.எம்.எஸ். அமீரலி, கெளரவ அதிதிகளாக
கல்முனை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம். ஜஹ்பர்,
மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் அதிபர் எம்.எம். ஹிர்பஹான்,
பெரியநீலாவணை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜே.எஸ்.கே. வீரசிங்க, விஷேட அதிதிகளாக
கல்முனை பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் ஏ.சி.எம். பழீல், மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளரும் மற்றும் மருதமுனை பிரதேச வைத்தியசாலை அபிவிருத்திச் சங்க செயலாளருமான பி.எம்.அறபாத் யசீன், தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் போதனாசிரியர்களான
ஐ.எம். அபுல் ஹஸன், ஆர்.பி. சந்துணி மகேசிகா ஆகியோர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வை திறன்பட தொகுத்து வழங்கினார் சிரேஷ்ட அறிவிப்பாளர் பஷீர் அப்துல் கையூம் அவர்களின் சகோதரர் பஷீர் அப்துல் வாயிஸ் ஆசிரியர் அவர்கள்.
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆசிரியர்கள், மற்றும் சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் என
73 அரச உத்தியோகத்தர்கள் இப்பாடநெறியினை பூர்த்தி செய்துள்ளதுடன் அவர்களது கலை, கலாசார மற்றும் திறன் விருத்தி நிகழ்ச்சிகளும் அதிதிகளின் உரைகளும் இடம்பெற்றது.
நாட்டின் நிர்வாகத்துறையினை சிறப்பாக முன்னெடுக்கும் வகையிலும், சகல இன மக்களிடத்திலும் மொழி வழியிலான சமாதானம், ஐக்கியம், இன ஒற்றுமையை கட்டியெழுப்பும் வகையிலும், அரச உத்தியோகத்தர்களை இரு மொழிப் பயன்பாட்டிற்கு தேர்ச்சி பெறச் செய்யும் நோக்கில், தமிழ் பேசும் அரச ஊழியர்களுக்கு சிங்கள பாடநெறி அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இவ்வாறான பாடநெறிகள் அம்பாறை மாவட்டத்தில் பல அலுவலகங்களிலும் திணைக்களங்களிலும் நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours