துறைநீலாவணை
பொது நூலகமும் வாசகர் வட்டமும் இணைந்து நடாத்தும் பரிசளிப்பு விழா நிகழ்வு
துறைநீலாவணை சித்தி விநாயகர் வித்தியாலயத்தில் வாசகர் வட்டத் தலைவர் சி.ஜெயானந்தம் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு
நடைபெற்றது.
நிகழ்வில்
ஆன்மீக அதிதிகளாக சிவசிறி நாகராஜா சர்மா,துறைநீலாவணை மெதடிஸ்த
திருச்சபையின் பாஸ்டர் எஸ்.கதிரேசபிள்ளை மற்றும் மண்முனை தென் எருவில்
பற்று பிரதேச சபையின் செயலாளர் சா.அறிவழகன் பிரதம அதிதியாகவும்,சனசமூக
அபிவிருத்தி உத்தியோகத்தர் சி.குகநேசன்,சிறப்பு அதிதியாகவும். அழைப்பு
அதிதிகளாக துறைநீலாவணையிலுள்ள பாடசாலைகளின் அதிபர்கள்,உதவும் கரங்கள்
அமைப்பினர்,பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து .கொண்டனர்இதன் போது சஞ்சிகை வெளியீடு,செய்யப்பட்டதுடன் கையெழுத்துச்
சஞ்சிகைக்கான விமர்சனத்தினை ஆசிரியரும் கலைஞருமாகிய ஜீவதாஸ்(அனல்)அவர்கள்
நிகழ்த்தினார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுப் பொருட்கள்
வழங்கப்படவுள்ளதுடன் ஆரம்ப கால நூலகர்கள் மற்றும் அதிதிகள் அனைவரும்
கௌரவத்தினைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours