கல்விப்பணி ஆற்றுவதில் முன் உதாரணமாக விளங்குகின்ற கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள புகழ்பூத்த குருமண்வெளி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பரிபாரண சபையினர் மட்/ பட்/குருமண்வெளி சிவசக்தி  மகாவித்தியnhலயத்தில் நிலுவையில் இருந்துவந்த நீர் மற்றும் மிகசாரக்கட்டணங்களைச் செலுத்தியுள்ளனர்

அதிபர் சோமசுந்தரம்- செல்வம் அவர்கள் தமது பாடசாலையின் நிலுவைத் தொகையில் இருந்த மின்சார கட்டணம் மற்றும் குடிநீர் கட்டணம்  ௹(96000) என்பவற்றை செலுத்த வேண்டிய தேவையை குமண்வெளி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பரிபாலன சபைத் தலைவர் அருள் செல்வநாயகம் - ரவீந்திரன் ரவி  என்பவரிடம் கோரிக்கை விடுத்த போது உடன் செயற்ட்டு ஆலய பரிபாலன சபையினரது அங்கிகாரத்துடன் நீர் பட்டியல் மற்றும் மின்சாரப்பட்டியில் என்பவற்றை உடனடியாக செலுத்தியுள்ளனர்

பாடசாலையின் மாணவர்களுடைய கல்வி நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாதவண்ணம் முன்மாதிரியாக செயல்பட்டுள்ளனர். 

இப்பணியானது போற்றக்கூடிய ஒரு விடயமாகவும் அனைவராலும் மதிக்கப்பட கூடிய ஒரு விடயமாகவும் திகழ்கிறது இவ்வாறு எமது இந்து ஆலயங்கள் அனைத்தும் தமது பணிகளை சமூகத்துக்காகவும் சமூகத்தின் கல்வி முன்னேற்றத்திற்காகவும் ஆற்றுமானால் எமது சமூகம் கல்விச் சமூகமாக மாறி உலகளாவிய ரீதியில் புகழ் பூத்து விளங்கும் என்பது ஐயமற்ற ஒரு விடயமாகும். என அதிபர் சுட்டிக்காட்டியதுடன்

குருமண்வெளி சிவசக்தி மகா வித்தியாலய நிர்வாகத்தினர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இவ்வாலய பரிபாலன சபையினருக்கு பல கோடி நன்றிகளையும்  பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.அத்தோடு இப்பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுடைய பெற்றோர்களும் தமது நன்றிகளையும் பாராட்டுகளையும் குருமண்வெளி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பரிபாலன சபையினருக்கு தெரிவித்துள்ளனர்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours