(எம்.ஏ.றமீஸ்)
பலஸ்தீனிலும் காஸா பிரதேசத்திலும் இஸ்ரேல் மேற்கொண்டுள்ள போரினை நிறுத்தக் கோரி இன்று(10) அக்கரைப்பற்று பிரதேசத்தில் கண்டன ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.அக்கரைப்பற்று பட்டின ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்ற ஜும்ஆ தொழுகையினைத் தொடர்ந்து ஒன்று திரண்ட பெருந்தொகையான மக்கள் இவ் ஆர்ப்பாட்டத்தின்போது கலந்து கொண்டனர். அக்கரைப்பற்று பிரதான வீதி வழியாக பேரணியாகச் சென்ற மக்கள் அக்கரைப்பற்று மணிக்கூட்டுக் கோபுர சுற்று வட்டத்தில் ஒன்று கூடி இஸ்ரேலிய தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு, பலஸ்தீன மக்களின் நிம்;மதிக்காகவும், மரணித்த அப்பாவி மக்களின் ஈடேற்றத்திற்காகவும் விஷேட துஆ பிரார்த்தனை இடம்பெற்றது.
இதன்போது அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவது தடுக்கப்படவேண்டுமெனவும், உடனடியாக போர் நிறுத்தப்பட்டு அங்குள்ள மக்கள் நிம்மதியாக வாழ வழி ஏற்படுத்தப்பட வேண்டுமெனவும் வலியுறுத்திய கோசங்கள் எழுப்பப்பட்டதுடன் பலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் இஸ்ரேலிய போர்க் குற்றத்தினை கண்டித்தும் எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய பதாதைகளை பெருந்திரளான மக்கள் ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours