சுதந்திர ஊடகவியலாளரும் சமாதான நீதிவானுமாகிய உ.உதயகாந்தின் தாயார் நேற்று (09) திகதி இரவு இயற்கையெய்தியுள்ளார்.
கல்லடி உப்போடையை பிறப்பிடமாகவும், கல்லடி வேலூரை வசிப்பிடமாகவும் கொண்ட 62 வதுடைய உதயரஜனி உதயகுமார் ஆகிய இவர் மூன்று பிள்ளைகளின் அன்பு தாயார் ஆவார்.
கடந்த சில மாதங்களாக சுகயீனமுற்றிருந்த இவர் நேற்று (09) வியாழக்கிழமை இரவு திடீரென இயற்கையெய்தியுள்ளார்.
இவரது இறுதிக் கிரிகைகள் அன்னாரது கல்லடி வேலூரில் உள்ள இல்லத்தில் இன்று (10) திகதி பி.ப 4.30 மணியளவில் நிகழ்த்தப்பட்டு, அதன் பின்னர் கல்லடி உப்போடை இந்து மயானத்தில் நல்லடக்கம் இடம்பெறவுள்ளது.
Post A Comment:
0 comments so far,add yours