மட்டக்களப்பு மாவட்ட தேசிய மக்கள் சக்தி பிரதிநிதிகளுக்கும் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையில் விசேட கலந்துரையாடலொன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.
ஜனாதிபதி செயலகத்தின் மக்கள் தொடர்பு பணிப்பாளர் நாயகத்திற்கும் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளில் கூட்டிற்கும் இடையில் சந்திப்பொன்று இன்று கொழும்பில் இடம்பெற்றது.
ஜனாதிபதி செயலக கட்டிடத்தில் ஜனாதிபதி செயலகத்தின் மக்கள் தொடர்பு பணிப்பாளர் நாயகம் டீ.கமகே அவர்களுடன் இன்று (15) திகதி இடம்பெற்ற கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் கூட்டின் உயர் பீட பிரதிநிதிகள் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ஆலோசனை சபையின் துறைசார் ஆலோசகர்கள், கலந்து கொண்டு நீண்ட காலமாக மாவட்டத்தில் நிலவிவரும் பிரச்சனைகள் தொடர்பாக பணிப்பாளர் நாயகம் அவர்களுக்கு தெளிவுபடுத்தியதுடன், தாம் எதிர்பார்க்கும் தீர்வினையும் கோரிக்கைகளாக முன்வைத்திருந்தனர்.
இன்று (15) திகதி நடைபெற்ற குறித்த சந்திப்பின் போது விசேடமாக விவசாயம், கால்நடை மற்றும் மேச்சல் தரை பிரச்சனை, சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் அபிவிருத்தி, பெண்கள் மற்றும் மகளீர் அபிவிருத்தி, காணி, புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலை, மாவட்டத்திற்கு உகந்ததாக அமையாத அடிவிருத்தி திட்டங்கள், யானை மனித மோதல், நுண்கடன், போதனா வைத்தியசாலையின் தலசீமியா பிரிவை உருவாக்குதல், நீண்டகாலமாக நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்துவந்த முந்தனையாறு திட்டத்தை நடைமுறைப்படுத்தல், கண்டியணாறு திட்டம், மகாவலி திட்டம் போன்ற மேலும் பல மாவட்டம் சார்ந்த நலத்திட்டங்கள் தொடர்பாக இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது மிகவும் வெற்றிகரமாக அமைந்ததுடன், தாம் திட்டமிட்டபடி அனைத்துப் பிரச்சினைகளையும் தெளிவுபடுத்த முடிந்ததுடன், மட்டக்களப்புக்கு வருகை தருமாறு பணிப்பாளர் நாயகத்தின் ஊடாக தாம் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்ததாகவும், அனைத்துப் பிரச்சினைகளையும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக பணிப்பாளர் நாயகம் ஒப்புக்கொண்டுள்ளதாக குறித்த சந்திப்பின் நிறைவில் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் கூட்டின் பிரதிநிதியொருவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் விசேட இப்தார் நிகழ்வு காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் ( 22 ) திகதி நடைபெற்றது.
அகில இலங்கை சமாதான நீதிவானும் சிரேஸ்ட ஊடகவியலாளரும் மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தலைவருமாகிய "சாமஸ்ரீ தேசமான்ய" உ.உதயகாந்த் (JP) தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி.ஜஸ்டினா யுலேகா முரளிதரன் கலந்து சிறப்பித்துள்ளார்.
இந் நிகழ்விற்கு ஆன்மீக அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட பல் சமய ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ வீ.கே.சிவபாலன் குருக்கள்,காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க்.எச்.எம்.எம்.இல்ஹாம் பலாஹி BA, அருட்தந்தை ஏ.யேசுதாஸ் அடிகளாரும் கலந்து சிறப்பித்தனர்.
இந் நிகழ்விற்கு விசேட அதிதிகளாக காத்தான்குடி பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தர் எம்.ரஹூப், மட்டக்களப்பு மாவட்ட ஊடகப் பிரிவின் பொறுப்பதிகாரி வடிவேல் ஜீவானந்தன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்துள்ளனர.
இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அளப்பரியசேவையாற்றி வரும் மாவட்ட அரசாங்க அதிபருக்கு கௌரவமளிக்கும் வகையில் அவரது சேவையைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி, மலர் மாலை அணிவித்து, நினைவுச்சின்னம் வழங்கப்பட்டதுடன், சங்கத்தினால் ஏற்கனவே வெளியிடப்பட்ட "நீதியின் நிரல்" நூலின் பிரதியும் அரசாங்க அதிபருக்கு வழங்கி வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் ஆரம்பகால உறுப்பினர்களாக செயற்பட்டு சங்கத்தின் வளர்ச்சிப் பாதைக்கு அளப்பரிய பங்காற்றியமைக்காக சங்கத்தின் முன்னால் மற்றும் தற்போதைய உறுப்பினர்களுக்கு பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான ஜஸ்டினா யுலேக்கா முரளிதரன் அவர்களால் பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இதன்போது, ஆரம்ப காலத் தலைவர் யோசப் இராஜேந்திரன் தவராசா (JP), ஆரம்ப கால பொருளாளரும் முன்னாள் தலைவருமான அல்ஹாஜ் பாவலர் சாந்தி முஹியித்தீன் (JP), முன்னாள் உப தலைவரும் அமைப்பின் வளவாளருமான அ.அன்பழகன் குறூஸ் (JP), முன்னாள் உப தலைவர் கதிராமத்தம்பி ஜெயசுந்தரம் (JP), ஆரம்ப காலச் செயலாளர் பாலிப்போடி இன்பராசா (JP) , முன்னாள் உப செயலாளரும் தற்போதைய உப தலைவருமான அல்ஹாஜ் முகமது யூசுப் ஆதம் (JP), முன்னாள் செயலாளர் கந்தப்போடி தங்கராசா (JP) மற்றும் முன்னாள் பொருளாளரும் தற்போதைய பொருளாளருமான Dr.சபாரெத்தினம் சுதர்சன் (JP) ஆகியோருக்கு இதன் போது கௌரவமளிக்கப்பட்டது.
சங்கத்தின் ஆரம்ப கால மற்றும் தற்போதைய தலைவர்கள், உப தலைவர்கள், செயலாளர்கள், சங்கத்தின் கணக்காய்வாளர்கள் பொருளாளர் உள்ளிட்ட சங்கத்தின் நிருவாக சபை உறுப்பினர்கள் மற்றும் சங்கத்தின் பிரதேச இணைப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள், நலன் விரும்பிகள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்ததுடன், இந்நிகழ்வினை கவிஞ்ஞர் ஜீ.எழில்வண்ணன் தொகுத்து வழங்கியதுடன், குறித்த நிகழ்விற்கு முன்னர் சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் இவ்வாண்டிற்கான இரண்டாவது நிர்வாக சபைக் கூட்டம் தலைவர் "சாமஸ்ரீ தேசமான்ய" உ.உதயகாந்த் (JP) தலைமையில் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாணத்தில் அச்சு, இலத்திரனியல், இணையத்தளம், பதிவு செய்யப்பட்ட சமூக ஊடகங்களில் பணிபுரியும் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு தனித்துவத்துடன் செயற்படக்கூடிய அமைப்பை உருவாக்குவதற்கான முதல் முயற்சியாக விசேட கூட்டமொன்று இன்று 02.03.2025 திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 04 மணிக்கு மட்டக்களப்பிலுள்ள வொயிஸ் ஒ(f)ப் மீடியா ஊடக கற்கைகள் ஆய்வு நிலையத்தில் நடைபெற்ற போது கிழக்கு தமிழ் ஊடக இல்லம் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.
ரூமேனியா நாட்டிற்கான வேலைவாய்ப்பிற்கு நேர்முகப் பரீட்சை மட்டக்களப்பில் இடம் பெறுகிறது.
ரூமேனியா நாட்டில் தொழில்நுட்ப தொழிலாளர்கள் வேலை பெறுவதற்காக அங்கீகரிக்கப்பட்ட முகவர் நிலையங்களின் ஊடாக விண்ணப்பித்திருந்தவர்களை தேர்ந்தெடுப்பதற்கான நேர்முகப் பரீட்சை மட்டக்களப்பு கிரீன் காடன் கொட்டிலில் இடம்பெற்று வருகிறது. இன்றும் நாளையும் இரண்டு நாட்கள் இது தொடரும் என கூறப்படுகிறது. நேர்முகப் பயிற்சியை ரூமேனியா நாட்டிலிருந்து வந்தவர்களே நடத்துகிறார்கள்.
நேர்முகப் பரீட்சையில் நூற்றுக்கணக்கான வாலிபர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு செய்முறை செயல்பாடும் இந்த இடத்திலே இடம் பெறுகிறது, தேர்வு செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு இலக்க தகடும் வழங்கப்படுகிறது.
மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த தொழிலற்ற இளைஞர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறப்படுகிறது.
மட்டக்களப்பிலுள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் பணிப்பாளர் பி.சந்திரகுமார் இதற்கான ஒழுங்குகளை செய்து வருவதை காணக் கூடியதாக இருக்கிறது.



















































