ரூமேனியா நாட்டிற்கான வேலைவாய்ப்பிற்கு நேர்முகப் பரீட்சை மட்டக்களப்பில் இடம் பெறுகிறது.

ரூமேனியா நாட்டில்  தொழில்நுட்ப தொழிலாளர்கள் வேலை  பெறுவதற்காக அங்கீகரிக்கப்பட்ட முகவர் நிலையங்களின் ஊடாக விண்ணப்பித்திருந்தவர்களை தேர்ந்தெடுப்பதற்கான நேர்முகப் பரீட்சை மட்டக்களப்பு கிரீன் காடன் கொட்டிலில் இடம்பெற்று வருகிறது.  இன்றும் நாளையும் இரண்டு நாட்கள் இது தொடரும் என கூறப்படுகிறது. நேர்முகப் பயிற்சியை ரூமேனியா நாட்டிலிருந்து வந்தவர்களே நடத்துகிறார்கள்.

நேர்முகப் பரீட்சையில் நூற்றுக்கணக்கான வாலிபர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு செய்முறை செயல்பாடும்  இந்த இடத்திலே இடம் பெறுகிறது, தேர்வு செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு இலக்க தகடும் வழங்கப்படுகிறது.

மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த தொழிலற்ற இளைஞர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறப்படுகிறது.

மட்டக்களப்பிலுள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின்  பணிப்பாளர் பி.சந்திரகுமார் இதற்கான ஒழுங்குகளை செய்து வருவதை காணக் கூடியதாக இருக்கிறது.





Share To:

Thaayman

Post A Comment:

0 comments so far,add yours