மட்டக்களப்பு மாவட்ட தேசிய மக்கள் சக்தி பிரதிநிதிகளுக்கும் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையில் விசேட கலந்துரையாடலொன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, மட்டக்களப்பு மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளை நேரடியாக சந்தித்து கலந்துரையாடுவதற்கான வாய்ப்பினை வழங்கியதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் அலுவலகத்தில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் கே.திலகநாதன், மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர் எஸ்.சுரேஸ் ரொபட் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.
மட்டக்களப்பு மாவட்டம் சார்ந்த உரிமை மற்றும் அபிவிருத்தி விடயங்கள் குறித்து ஆழமாக இதன் போது கலந்துரையாடப்பட்டது.
சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பெண்ணுரிமை செயற்பாட்டாளர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டிருந்ததுடன், தமது ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவித்திருந்ததுடன், குறித்த கலந்துரையாடலின் போது மிக முக்கிய விடையமாக கலந்துரையாடப்பட்ட பண்ணையாளர்களின் மேச்சல் தரை பிரச்சனைக்கு மிக விரைவாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தீர்வினை பெற்றுத்தருமெனவும் தம்மை நம்பலாமென தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்திருந்ததுடன், கிரான் பாலம், வைத்தியசாலைகளில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்தல், கல்வி திணைக்களம் சார்ந்த பிரச்சனைகள் உள்ளிட்ட விடையங்களுக்கான தீர்வினையும் மிக விரைவாக பெற்றுத்தருவதாகவும் உறுதியளித்திருந்தார்.
மேலும் முந்தனையாறு திட்டம் அமைச்சரவை அனுமதிக்காக தாயார் நிலையில் உள்ளது என்று பாராளுமன்ற உறுப்பினரினால் தெரிவிக்கப்பட்டதுடன், கண்டியனாறு குள விஸ்தீரணம், சட்டவிரோத மண் அகழ்வு, போதைப்பொருள் ஒழிப்பு, மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் கடினமான பாடசாலை பட்டியலில் இருந்து நீக்கும் சுற்று நிருபம் வெளியிடப்பட்டதனால் எதிர்காலத்தில் ஆசிரியர் மற்றும் வள பற்றாக்குறைகள் ஏற்படலாம் என்பது
போன்ற மேலும் பல விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.










Post A Comment:
0 comments so far,add yours