நூருல் ஹுதா உமர்

பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் கட்டணம் செலுத்தி சிகிச்சை பெறும் விடுதி (Paying ward) அமைப்பதற்கான இடங்களையும், அங்கு இடம்பெற்றுவரும் கட்டிட நிர்மாணப்பணிகள் உள்ளிட்ட சகல அபிவிருத்தி பணிகளையும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் தலைமையிலான குழுவினர் நேற்று (06) பார்வையிட்டனர்.                    

இதன்போது பிராந்திய திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர், பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் எம்.ஐ.எம்.றஹீம் மற்றும் பொறியியலாளர்கள், தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.  

சீன அரசின் நிதியுதவில் சகல வசதிகளையும் கொண்ட மூன்று மாடிக்கட்டிடம் மற்றும் அவச சிகிச்சை பிரிவு நிருவாகப் பிரிவு வசதிகளைக் கொண்ட கட்டிட தொகுதி என பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours