(அஸ்ஹர் இப்றாஹிம்)


கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் தற்போது பரவலாக அதிக மழை வீழ்ச்சி கிடைத்து வருகின்றது. 

இதனால் மாகாணத்திலுள்ள நீர் நிலைகள், ஆறுகள்,குளங்கள்,ஏரிகள், கிணறுகள் மற்றும் குட்டைகள் என்பவற்றின் நீர்மட்டம் உயர்ந்து வருகின்றது. 

எனவே,பொது மக்கள் நீரேந்து பிரதேசங்களில் மிக அவதானமாக முன்னெச்சரிக்கையுடன் தொழில்பட்டு ,வேண்டத்தகாத  உயிரிழப்புகள் மற்றும் ஏனைய அனர்த்தங்களிலிருந்து பாதுகாப்பு பெறவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீர் நீலைகளில் நீராடி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கிழக்கில் கடந்த காலங்களில் அதிகரித்துக் காணப்படுகின்றது. 

குறிப்பாக பாடசாலை மாணவர்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்குமாறு பெற்றோர்களின் அவதானம் இருக்க வேண்டும்.

கிழக்கு மாகாணத்திற்கு வெளி மாகாணங்களிலிருந்து வருகை தருபவர்கள் மேற்படி நீரேந்து பகுதிகளில் மிகவும் அவதானமாக நடந்து கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் அறிவித்துள்ளது.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours