( வி.ரி. சகாதேவராஜா)
மண்முனை
தென் எருவில்பற்று பிரதேச செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின்
ஏற்பாட்டில் வருடாந்தம் நடாத்தும் இரத்ததான நிகழ்வானது( குருதிக்கொடை) இவ்
வருடமும் களுவாஞ்சிக்குடியில் சிறப்பாக நடைபெற்றது.
களுவாஞ்சிகுடி
ஆதார வைத்தியசாலை மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த
வங்கியுடன் இணைந்து ஏற்பாடு செய்த இரத்ததான நிகழ்வானது நேற்று புதன்கிழமை
(08.11.2023) மு.ப 8.30 மணி தொடக்கம் பி.ப 5.000 மணி வரை பிரதேச
செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் தலைமை மற்றும் வழிகாட்டுதலில்
பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
விளையாட்டு
கழகங்கள், இளைஞர் கழகங்கள் , கிராம அபிவிருத்தி சங்கங்கள், மாதர் கிராம
அபிவிருத்தி சங்கங்கள், பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் மற்றும் பிரதேச
செயலக உத்தியோகத்தர்கள் என இருநூறுக்கும் அதிகமானோர் இவ் உன்னதமான
நிகழ்வில் கலந்துகொண்டு குருதிக்கொடை வழங்கினர் .
Post A Comment:
0 comments so far,add yours