இலங்கையில் அணுமின் நிலையத்தை நிர்மாணிக்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது.

2032ஆம் ஆண்டளவில் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதக, இலங்கை அணுசக்தி சபையின் தலைவர் பேராசிரியர் எஸ்.ஆர்.டி.ரோசா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அணுசக்தி சட்டம் தயாரிக்கப்படவுள்ளது. இதற்காக சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் அணுசக்தி மற்றும் ஒப்பந்தச் சட்டப் பிரிவின் தலைவர் அந்தோனி வெதரோல் உட்பட நான்கு பிரதிநிதிகள் இலங்கை வந்துள்ளனர்.

அணுமின் நிலையம்

கொழும்பு துறைமுக நகரம், இலகுரக ரயில் உள்ளிட்ட நாட்டின் புதிய திட்டங்களுக்கு அணுசக்தி மின்சார வழங்கல் மிகவும் பொருத்தமான தெரிவாகும்.அதன்படி, 400 மெகாவோட் திறன் கொண்ட மிதக்கும் அணுமின் நிலையம் குறித்து இலங்கை கவனம் செலுத்தி வருவதாக என இலங்கை அணுசக்தி சபையின் தலைவர் பேராசிரியர் எஸ்.ஆர்.டி.ரோசா தெரிவித்தார்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours