எஸ்.சபேசன்

சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் வாகரைப்பிரதேசசெயலாளர் பிரிவுக்குட்பட்ட மிகவும் பின்தங்கிய பிரதேசமான வம்மிவட்டுவான் கிராமத்தில் வாழும் ஒரு குடும்பத்தின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக தையல் இயந்திரம் வியாழக்கிழமை வழங்கிவைக்கும் நிகழ்வு அமைப்பின் தலைவர் ஓய்வுநிலை பிரதிக்கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் தலைமையில் இடம்பெற்றது.

இவ் உதவியானது சுவிஸ் நாட்டில் வாழும் வியஜகுமார் சாந்தி தம்பதியினரின் புதல்வர்களான லுகிர்சன் லுகிர்த்தனன் ஆகியோரின் பிறந்தநாளினை முன்னிட்டு இவ் உதவி வழங்கிவைக்கப்பட்டது.

சுவிஸ் நாட்டில் இருந்து வருகைதந்த தாய்ச் சங்கத்தின் செயலாளர் அம்பலவாணர் ராஜன் இலங்கைக்கான இணைப்பாளரும் தாய்ச்சங்கத்தின் பொருளாளர் சமூகசேவகர் க.துரைநாயகம்; கிழக்குமாகாணக் கிளையின் செயலாளர்  றோமிலா செங்கமலன் பிரதித்தலைவர் கணவரதராஜன் உறுப்பினர் அகிலன் கலந்துகொண்டனர்










Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours