(எஸ். சதீஸ்குமார் )
படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் அமரர் லசந்த விக்ரமதுங்கவின் 15வது ஆண்டு நினைவுதினம் திங்கட்கிழமை (08.01.2024 ) காலை 10 மணிக்கு மட்டக்களப்பில் உள்ள ஊடகவியலாளர்களின் நினைவுத்தூபியில் அனுஷ்டிக்கப்பட்டது.மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் , கிழக்கு இலங்கை செய்தியாளர் சங்கம்
மற்றும் மட்டக்களப்பு ஊடக அமையம் என்பன இணைந்து இந்த நிகழ்வினை நடத்தியிருந்தது.
மட்டக்களப்பு
நகரில் உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபியில் மலர்
அஞ்சலி செலுத்தப்பட்டு, அதனைத் தொடர்ந்து கடத்தப்பட்ட, படுகொலை செய்யப்பட்ட
ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரிய கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றும்
இடம்பெற்றது.
Post A Comment:
0 comments so far,add yours