நூருல் ஹுதா உமர்
சிறுவர்களிடையே வேகமாக பரவி வரும் சின்னம்மை (சின்னமுத்து) தொற்றை கட்டுப்படுத்தும் பொருட்டு 6 முதல் 9 மாத வயதுடைய குழந்தைகளுக்கு மேலதிகமான சின்னமுத்து தடுப்பூசி ஒன்றை வழங்கும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழான வேலைத்திட்டம் சனிக்கிழமை முதல் கல்முனை பிராந்தியத்திலும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.
சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சஹிலா இஸ்ஸடீன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் பிராந்திய தொற்றுநோய் தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஏ.சீ.எம்.பஸாலின் மேற்பார்வையின் கீழ் இத்தடுப்பூசி வழங்கும் பணி முன்னெடுக்கப்பட்டது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் உள்ள 13 சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் ஊடாக 68 தடுப்பூசி வழங்கும் நிலையங்களில் இப்பணி முன்னெடுக்கப்பட்டது. இதுவரை மொத்தமாக 1562 பேருக்கு இத்தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
Post A Comment:
0 comments so far,add yours