(அஸ்ஹர் இப்றாஹிம்)
வெள்ளத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட அட்டாளைச்சேனை புறத்தோட்டம் கிராமத்திற்கு விஜயம் செய்த திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் அப்பகுதி மக்களை சந்தித்ததுடன் நிலைமைகளையும் கேட்டறிந்து கொண்டார்.
பாராளுமன்ற உறுப்பினரின் அட்டாளைச்சேனை இணைப்பாளரும், சிரேஷட ஊடகவியலாளருமான எஸ்.எம்.அறூஸ் அவர்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற இவ்விஜயத்தில் தன்னால் முடிந்த உதவிகளையும் புறத்தோட்ட மக்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் வழங்கி வைத்தார்.
பாராளுமன்ற உறுப்பினருடன் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பொத்துவில் கிளையின் தலைவர் மெளலவி ஏ.முகைதீன் பாவா ஷர்கி, ஹபீப் மௌலவி, பாராளுமன்ற உறுப்பினரின் மக்கள் தொடர்பு அதிகாரி அஸாம் அப்துல் அஸீஸ், பாராளுமன்ற உறுப்பினரின் ஒலுவில் இணைப்பாளர் எம்.ஜே.எம்.அஸ்ஹர், மத்திய குழு செயலாளர் ஏ.எல்.கியாஸ்தீன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours