வெல்லாவெளி
பிரதேச செயலக பகுதிகளில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கான அசுவெசும
கொடுப்பனவுக்கு தேசிய அடையாள அட்டை அத்தியாவசியமாக்கப்பட்டுள்ளதால்
அவர்களுக்கான விசேட நடமாடும் சேவை திருப்பழுகாமம் கலாசார நிலையத்தில் (19)
இன்று பிரதேச செயலாளர் சோ.ரங்கநாதன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது
வன்னிநகர், மாவேற்குடா, வீரஞ்சேனை, பழுகாமம் - 01, பழுகாமம் - 02 மற்றும்
விபுலானந்தபுரம் ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் வசிக்கும் 60
வயதுக்கு மேற்பட்ட அசுவெசுமக்கு தகுதியுள்ள இதுவரை அடையாள அட்டை இல்லாத
பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
Post A Comment:
0 comments so far,add yours