மட்டக்களப்பு - வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாந்தீவு வாவியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுணதீவு வாவிக்கு படகில் மீன்பிடிக்க நேற்று முன்தினம்(08.01.2024) சென்ற நபர் இரண்டு தினங்களின் பின்னர் இன்று(10.01.2023) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஈச்சந்தீவு, நாவற்காடு பகுதியை சேர்ந்த 42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான சுந்தரன் விமலகாந்தன் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
Post A Comment:
0 comments so far,add yours