கல்வியமைச்சும் தேசிய நூலக ஆவணமாக்கல் சபையும் இணைந்து தேசிய ரீதியில் பாடசாலைகளுக்கிடையில் நடாத்திய வாசிப்பு மாத போட்டி நிகழ்ச்சியில் பங்குபற்றி வெற்றியீட்டியமைக்காக ஓட்டமாவடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) விருது வழங்கும் விழாவில் விஷேட விருதினைப்பெற்றுக் கொண்டது.
தேசிய நூலக ஆவணமாக்கல் சேவைகள் சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் குறித்த தேசிய வெற்றிச்சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதனை பாடசாலை சார்பாக கல்லூரி முதல்வர் அல்ஹாஜ் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக் பெற்றுக் கொண்டார்.
மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகளில் இச்சான்றிதழினை ஓட்டமாவடி மத்திய கல்லூரி மாத்திரம் பெற்றுக் கொண்டமை சிறப்பம்சமாகும்.
Post A Comment:
0 comments so far,add yours