( வி.ரி.சகாதேவராஜா)

அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேச செயலக பிரிவிலுள்ள திராய்க்கேணி மக்களுக்கு சமைத்த உணவு நேற்று இரண்டாவது நாளாகவும் வழங்கி வைக்கப்பட்டன.

 அங்குள்ள பெரும்பாலான வீடுகள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. வீதிகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.


 காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் பிரபல சமூக சேவையாளருமான கி.ஜெயசிறில் அங்கிருந்த மக்களுக்கு தொடர்ந்து சமைத்த உணவை வழங்கி வருகிறார். 
அவருடன் சமூக செயற்பாட்டாளர் வி.ரி.சகாதேவராஜாவும் கலந்துகொண்டு உணவை வழங்கி வருகிறார்.

 மக்கள் வீதிகளில் நின்று அந்த உணவை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours