(எம்.எம்.றம்ஸீன்)
சமூகப் பணிக்கு தம்மை அர்ப்பணித்துள்ள ஏ.ஆர்.மன்சூர் பவுண்டேஷனின் ஏற்பாட்டில் "சுத்தமான சூழலை நோக்கி" எனும் தொனிப் பொருளில் மாபெரும் சிரமதான பணி கல்முனை ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல் கடற்கரைப் பிரதேச வளாகத்தில் இடம்பெற்றது.
ஏ.ஆர்.மன்சூர் பவுண்டேஷனின் ஸ்தாபக தலைவி சட்டத்தரணி மர்யம் நழிமுதீனின் தலைமையில்
இடம்பெற்ற இச்சிரமதான பணியில் அமைப்பின் முகாமையாளர் டாக்டர் எஸ்.நழிமுதீன் ஆகியோருடன் அமைப்பின் உறுப்பினர்களும் கலந்து கொண்டு இச்சிரமதானத்தினை ஆரம்பித்து வைத்தனர்.
கல்முனை மாநகர சபை சுகாதர பிரிவினர், கல்முனை ஹுதா ஜும்மா பள்ளிவாசல் தலைவர் உட்பட்ட நிர்வாகத்தினர் மற்றும் தஃவா குழு உறுப்பினர்களின் பங்குபட்டுதலுடன் இடம்பெற்ற குறித்த சிரமதான பணியில் கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையின் பொதுச்சுகாதார பரிசோதகர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் மீனவர்கள் என பலரும் கலந்துகொண்டு சிரமதான பணியினை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours