(அஸ்லம் எஸ். மெளலானா)
கல்முனை மாநகர சபையின் பதில் கணக்காளராக நியமிக்கப்பட்டுள்ள வை. ஹபீபுல்லாஹ் அவர்கள் இன்று திங்கட்கிழமை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி அவர்கள் முன்னிலையில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.இந்நிகழ்வில் மாநகர சபையின் உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம், பொறியியலாளர் ஏ.ஜே.ஏ.எச். ஜௌஸி உட்பட பிரிவுத் தலைவர்களும் உத்தியோகத்தர்களும் பங்கேறிருந்தனர்.
இதன்போது மாநகர ஆணையாளர் தலைமையில் உத்தியோகத்தர்கள் அனைவரும் பதில் கணக்காளரை வரவேற்று வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
கல்முனை வலயக் கல்விப் பணிமனையின் கணக்காளராக கடமையாற்றி வருகின்ற ஹபீபுல்லாஹ் அவர்கள் அதற்கு மேலதிகமாக கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலாளரினால் கல்முனை மாநகர சபையின் பதில் கணக்காளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours