(சுமன்)




ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைத்து சமமாகவும், அன்பாகவும் செயலாற்றிய உன்னதமான மனிதர் அமரர் ராகவன். ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியைப் பொருத்தவரையில் இவரது இழப்பு ஈடுசெய்யப்பட முடியாத ஒன்றாகவே இருக்கின்றது என ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளுள் ஒன்றான ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்தார்.

மாரடைப்பு காரணமாக இயற்கையெய்திய ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் செயலாளர் ராகவன் அவர்களுக்கான இரங்கல் செய்தியின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் செயலாளர் ராகவன் அவர்களின் மறைவு கேட்டு மிகவும் வேதனையுற்றோம். அவரின் பிரிவால் துயறுரும் அன்னாரின் குடும்பத்தினருக்கு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் சார்பில் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தமிழ்த் தேசநியப் பரப்பில் இவரது இழப்பு ஏற்க முடியாததும், பாராதூரமானதுமான விடயமாகும். இவரது இழப்பு எமது ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியைப் பொருத்தவரையில் ஈடுசெய்யப்பட முடியாத ஒன்றாகவே இருக்கின்றது. தமிழ் மக்களின் வாழ்வினை மிக ஆழமாக நேசித்த ஒருவர் இன்று எம்மை விட்டுப் பிரிந்துள்ளார்.

தமிழீழ விடுதலையை நேசித்து ஆயதப் போராளியாக தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடிய போராளி. அரசியற் செயற்பாடுகளிலும் அவர் மக்களுக்காக தன்னை அர்ப்பணித்து நேர்மையாகவும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைத்து சமமாகவும், அன்பாகவும் செயலாற்றிய உன்னதமான மனிதர்.

எமது விடுதலைப் போராட்டத்தில் நாங்கள் பல போராளிகளை இழந்த போதும் எமது மாவீரர்களை மனதில் நிறுத்தி எமது போராட்டத்தை அரசியல் ரீதியில் தற்போதும் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றோம். அந்த வகையில் மறைந்த எமது ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் செயலாளர் ராகவன் அவர்களின் எண்ணக்கருக்களை மனதில் நிறுத்தி ஜனநாயகத் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளையும், தமிழ் மக்களின் விடுதலை நோக்;கிய செயற்பாடுகளையும் ஒற்றுமையோடு முன்னெடுத்துச் செல்வோம் என்று தெரிவித்துள்ளார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours