2

பாறுக் ஷிஹான்



பல இலட்சம் பெறுமதியான 20 பவுண் நகைகளை திட்டமிட்டு களவாடிய 3   சந்தேக நபர்களை சவளக்கடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 5 ஆம் கொலனி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் 14.03.2024 அன்று வியாழக்கிழமை இரவு வீடு ஒன்றின் ஜன்னல் உடைக்கப்பட்டு உள் நுழைந்தவர்களால் சுமார் 39 இலட்சத்திற்கும் அதிகமான 20 பவுண் நகைகள் களவாடப்பட்டுள்ளதாக முறைப்பாடு 15.04.2024 மறுநாள் வெள்ளிக்கிழமை  கிடைக்கப்பெற்ற  நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

இதன் போது களவு இடம்பெற்ற வீட்டின் உரிமையாளர்கள் நோன்பு இரவு நேர  வணக்க வழிபாட்டிற்காக பள்ளிவாசலுக்கு சென்ற சமயம் பார்த்து 3 சந்தேக நபர்கள் இச்செயலை மேற்கொண்டதுடன் சுமார் 20 பவுண் நகைகளை குறித்த வீட்டின் ஜன்னலை உடைத்து எடுத்து சென்றிருந்தனர்.

இந்நிலையில் உடனடியாக செயற்பட்ட சவளக்கடை பொலிஸார் இத்திருட்டில் ஈடுபட்ட சாளம்பைக்கேணியை சேர்ந்த 33, 26 ,28, வயது மதிக்க தக்க சந்தேக நபர்களை கைது செய்ததுடன் சந்தேக நபர்கள் வசம் இருந்து களவாடி செல்லப்பட்ட 20 பவுண் நகைகளும் பொலிஸாரினால் மீட்கப்பட்டன.

இந்நடவடிக்கையில் சவளக்கடை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியும் பிரதான பொலிஸ் பரிசோதகருமான எம்.எம். அஸ்ரப் வழிகாட்டலில் பெருங்குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியும் உப பொலிஸ் பரிசோதகருமான எஸ் .ரவீந்திரராசா, உப பொலிஸ் பரிசோதகர் ஐயூப்கான், பொலிஸ் சார்ஜன்டுகளான அன்சார் (44203), ஜெசில்(44060), சம்பத்(70337),
பொலிஸ் உத்தியோகத்தர்களான திசாநாயக்க (70302) ,சாந்தன்(73628), ஆகியோர் ஈடுபட்டிருந்ததுடன் சந்தேக நபர்களை கல்முனை நீதிவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours