நாவிதன்வெளி பிரதேச செயலாளர் R.ராகுலநாயகி அவர்களின் வழிகாட்டலில் இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் நாவிதன்வெளி பிரதேச செயலக கலாசார பிரிவு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த 2024ஆம் ஆண்டிற்கான சிவராத்திரி விழா நிகழ்வுகளும் அதனோடு இணைந்த வகையில் நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான ஆக்கத்திறன் போட்டி நிகழ்வுகளும் 2024.03.08 ஆந் திகதியன்று இடம்பெற்றன. இந்நிகழ்வுகள் வாணி அறநெறிப் பாடசாலை (மத்தியமுகாம்-01), சைவமறுமலர்ச்சி சரஸ்வதி அறநெறிப் பாடசாலை, ஸ்ரீ முருகன் அறநெறிப் பாடசாலை (மத்தியமுகாம்-02), வேப்பையடி பிள்ளையார் அறநெறிப் பாடசாலை , நாவலடிப் பிள்ளையார் அறநெறிப் பாடசாலை (அன்னமலை-02), விளாவடிப் பிள்ளையார் அறநெறிப் பாடசாலை,இந்துமாமன்ற அறநெறிப்பாடசாலை (நாவிதன்வெளி-02), திரு முருகன் அறநெறிப் பாடசாலை  (நாவிதன்வெளி 1) ஆகிய இடங்களில்  அறநெறிப் பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பங்குபற்றலுடன் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மேலும், சைவ சமயச் சிந்தனைகள், கருத்துகள், மற்றும் பண்பாட்டு விழுமியங்களைப் பேணிப் பாதுகாக்கும் ஒரு சிறந்த திட்டமாக இவ் ஆக்கத்திறன்  போட்டி நிகழ்வுகள் அமையப் பெற்றிருந்தன இதில் கலாசார உத்தியோகத்தர்கள் மற்றும் ஆலய பரிபாலன சபையினர், அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பொது மக்கள்  என பலரும் கலந்து சிறப்பித்தனர்.






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours