எஸ்.சபேசன்
சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட அகத்தியர் வித்தியாலயத்தில் 2023 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் அதிபர் எஸ்.சிதம்பரப்பிள்ளை தலைமையில் இடம்பெற்றது.இப்பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்குமேல் 4 மாணவர்களும் 70 புள்ளிக்குமேல் 11 மாணவர்களும் பெற்று 100 வீதச்சித்திபெற்றமை முக்கியம்சமாகும்.
இந்நிகழ்வில் அதிதிகளாக வலயக்கல்விப்பணிப்பாளர் டாக்டர் உமர்மௌலானா நாவிதன்வெளிப்பிரதேசசெயலாளர் செல்வி ; இ.ராகுலநாயகி பிரதிக்கல்விப்பணிப்பாளர்களான பி.எம்.யசீர் அறபாத் திருமதி என்.மகேந்திரகுமார் உதவிக் கல்விப்பணிப்பாளர்களான நாவிதன்வெளிக்கோட்டக்கல்விப் பணிப்பாளர் பி.பரமதயாளன் எச்.நைரோஸ்கான் ஆசிரிய ஆலோசகர் கே.அற்புதராஜா மற்றும் அப்பிரதேச பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து சிறப்பித்திருந்தனர்
Post A Comment:
0 comments so far,add yours