தனுஜா சிவரூபன் யாழ். மாவட்டத்தில் காரைநகரை பூர்வீகமாக கொண்டவர். ஹற்றனில் வசித்து வருகின்றார்.
கட்டிட பொறியியலாளரான இவர் இசை துறை மீதான இயல்பான ஆர்வம் காரணமாக 2022 ஆம் ஆண்டு முதல்
T&D Tunes Channel என்கிற சனலை யூ டியூப்பில் ஆரம்பித்து நடத்துகின்றார்.
நீயே என் கண்ணம்மா, தொடுவானம் தூரம் இல்லை, நிலவும் நானும், இது கனவோ நிஜமோ, கல்லூரி காலங்கள், இசை மாயவள், மல்லிகை பூவே,
The Sparkles (Motivational Song) ஆகிய பாடல்களை யூ டியூப் மூலமாக வெளி கொணர்ந்துள்ளார்.
வளர்ந்து வருகின்ற கலைஞர்கள் பலருக்கும் முன்னின்று வாய்ப்புகளை வழங்குகின்றார்.
இவருடைய
படைப்பாற்றலை அங்கீகரித்து அகில இலங்கை கிராமிய கலைகள் ஒன்றியத்தால்
கலாரட்ன விபூஷண் விருதும், லக்ஸ்டோ மீடியா ஊடக வலையமைப்பால் கலைமாமணி
விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். மேலும் சென்னையில் இடம்பெற்ற
ஆன்மீக, இசை, நாடக பெருவிழாவில் வைத்து சாம்பசிவமணி குருக்களால் இசைஜோ தி விருது இவருக்கு வழங்கப்பட்டது.
விரைவில் வெளிவருகின்ற காற்றே காற்றே பாடல் அதீத வரவேற்பை பெறும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இவருடைய பாடல்களை https://www.youtube. com/@TDTunes2021 என்கிற சனலுக்கு சென்று இரசிக்க முடியும்.
Post A Comment:
0 comments so far,add yours