(சுமன்)


புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூக மயப்படுத்தப்பட்ட நபர்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில்

யுத்தத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் கிளிவெட்டி குமாரபுரம் கிராமத்தில் முன்பள்ளி மாணவர்களுக்கு அத்தியாவசிய சீருடைகளை வழங்கியும் மாவீரர்கள் பத்து குடும்பங்களுக்கு நிதிஉதவிகளும்  வழங்கப்பட்டது.

புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூக மயப்படுத்தப்பட்ட நபர்களின் ஒன்றியத்தின் தலைவர் கந்தசாமி இன்பராசா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் செயலாளர் ஆறுமுகம் ஜோன்சன் முக்கியஸ்தர்கள் திருகோணமலை மாவட்ட நிர்வாக உறுப்பினர்கள்

மாவீரர்களின் பெற்றோர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் யோகச்சந்திரனின் நிதிப் பங்களிப்பில் அவரது பேரனான கிரிதரன் சுஜதா தம்பதிகளின் செல்வப் புதல்வன் கிரிதரன் அர்ஜுன் அவர்களின் 09ஆவது பிறந்தநாள் நினைவாக இவ் உதவிகள் வழங்கப்பட்டது.

தமிழர் தாயகத்தில் பல்வேறு வாழ்வாதார அபிவிருத்தி சார்ந்த திட்டங்களை செய்துவரும் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூக மயப்படுத்தப்பட்ட நபர்களின் ஒன்றியம் தமிழர்களின் உரிமைசார் போராட்டத்தில் இனமானம் காக்க தொடர்ந்து செயலாற்றும் எமக்காக மடிந்த மாவீரர்களின் பெற்றோர்களையும் போராளிகளையும் வாழ்வியலில் உயர்த்த பல்வேறு திட்டங்களை செய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours