எதிர்வரும் 2024 பத்தாம் மாதம் இடம்பெறப்போகும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடவுள்ள ரணிலின் வெற்றி உறுதி என முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினரும் கல்முனை மேற்கு ஐக்கிய தேசியக்கட்சியின் அமைப்பாளருமான ஏ.எச்.எச்.எம்.நபார் தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடவுள்ள ரணிலின் வெற்றி குறித்து ஊடகங்களுக்கு தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்
பல அரசியல் கட்சிகள், பல்துறைசார்ந்த சமூகவியல் அமைப்புகள், கல்விமான்கள், புத்திஜீவிகள் போன்ற பலரின் ஆதரவோடு பொது வேட்பாளராக நிச்சயமாக போட்டியிடுவார்.
எனவே நாட்டின் தேசிய சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார விடயங்களில் பாரிய நீண்ட கால அனுபவம் கொண்ட இவரால் மாத்திரமே நாட்டின் சமகால அரசியல் பொருளாதார சமூகங்கள் சார்ந்த பிரச்சனைகளுக்கு நிலையான தீர்வுகளை வழங்க முடியும் ஆக இந்த உண்மையை உள்ளத்தினால் ஏற்றுக்கொண்ட நாட்டின் குடிமக்கள் நிச்சயமாக ஜனாதிபதியாக ரணிலை வெற்றி பெற செய்வார்கள் என உறுதிப்பட தெரிவித்தார்
Post A Comment:
0 comments so far,add yours