மாளிகைக்காடு செய்தியாளர்

காரைதீவு பிரதேச செயலக பிரிவின் 2024 ஆம் ஆண்டிற்கான முதலாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் காரைதீவு பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் அவர்கள் தலைமையிலும், பிரதேச செயலாளர் எஸ். ஜெகராஜன் அவர்களின் ஏற்பாட்டிலும் இன்றையதினம் (19) இடம்பெற்றது.

இதன்போது இவ்வாண்டு நடைமுறைப்படுத்துவதற்காக முன்மொழியப்பட்ட திட்டங்களுக்கான அனுமதியினை பெற்று கிடைக்கப்பெறும் வளங்களை பயன்படுத்தி உற்பத்தியினை அதிகரிப்பது தொடர்பிலும், விவசாயிகளின், அதிகாரிகளினதும் வேண்டுகோளுக்கமைவாக நீரியல் உயிரின பிரச்சினைகள்தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டிருந்தது. மேலும் அப் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பின்தங்கிய பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதனூடாக கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டிருந்தது. அத்துடன் ஏனைய அனைத்து திணைக்களங்கள் சார் விடயங்கள் தொடர்பிலும் அவற்றில் காணப்படும் குறைபாடுகளை  நிவர்த்தி செய்வது தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது.  

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் சார்பில் அவரது மக்கள் தொடர்பாடல் செயலாளர் யூ.எல்.என். ஹுதா உமரும், பாராளுமன்ற உறுப்பினர் டீ. வீரசிங்க சார்பில் அவரது இணைப்பாளர் ஏ.எம். ஜாஹீரும்,  பாராளுமன்ற உறுப்பினர் த. கலையரசன் சார்பில் காரைதீவு பிரதேச சபை முன்னாள் தவிசாளர் கி. ஜெயசிரிலும்,  பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரபின் இணைப்பாளர் ஏ.ஏ. அசாம் அவர்களும் கலந்து கொண்டிருந்தனர். மேலும் திணைக்கள தலைவர்கள், துறைசார் அதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours