(அஸ்ஹர் இப்றாஹிம்)
அம்பாறையிலிருந்து வெலிமடைக்கு அரிசி ஏற்றிச் சென்ற லொறி ஒன்று பதுளை நுவரெலியா பிரதான வீதியில் வெல்லவாய பகுதிக்கு அருகில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி உட்பட மூவர் காயமடைந்துள்ளதாக எடம்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
லொறியின் சாரதி இரும்பு கம்பிகளுக்கு மத்தியில் சிக்கியிருந்துள்ள நிலையில் சுமார் ஒரு மணிநேர போராட்டத்தின் பின்னர் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் காரணமாக வீதியின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ள நிலையில் மற்றுமொரு பகுதி போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
லொறியின் உதிரிபாகங்கள் பழுதடைந்ததே இந்த விபத்துக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours