(அஸ்ஹர் இப்றாஹிம்)
தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக அதிகரித்திருக்கின்ற நீர்க் கட்டணத்தினாலும், ஒலிவிலில் சில பிரதேசங்களில் மிக நீண்டகாலமாக நிலவிவந்த குடிநீர் சம்மந்தமான பிரச்சினைக்குத் தீர்வொன்றைப் பெற்றுத் தரும்பொருட்டு சம்மந்தப்பட்ட பயனாளிகள் பொதுக்கிணறுகள் அமைத்துத்தருமாறு கல்முனை ரஹ்மத் பவுண்டேசனிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக YWMA பேரவையின் ஒருங்கிணைப்பில்; ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளரும், கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் ஸ்தாபகருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள் மிகவும் குறுகிய நாட்களுக்குள் பொதுக்கிணறுகளை நிர்மாணித்து குறித்த பயனாளிகள் பாவனைக்காக திறந்து கையளித்து வைத்தார்.
Post A Comment:
0 comments so far,add yours