(வி.ரி.சகாதேவராஜா)
வரலாற்று
பிரசித்தி பெற்ற தேசத்து ஆலயமாம் நிந்தவூர் மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ
மீனாட்சி அம்பாள் ஆலயத்தின் துவி வருடாந்த அலங்கார உற்சவத் திருவிழாவில்
ஏழாம் நாள் திருவிழா காரைதீவு பிரதேச திருவிழாவாக சிறப்பாக இடம்பெற்றது.
அத் திருவிழாவை சிறப்பிக்குமுகமாக இலங்கை இராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மாநந்தா ஜீ மகராஜ் கலந்து சிறப்பித்தார்.
கொழும்பில்
இருந்து வருகைதந்த சுவாமி ஜீயை ஆலய பரிபாலன சபை தலைவர் கலாநிதி
கி.ஜெயசிறில் பரிபாலன சபை ஆலோசகர் உதவிக் கல்விப் பணிப்பாளர்
வி.ரி.சகாதேவராஜா மற்றும் நிருவாக சபையினர் காரைதீவு பக்தர்கள் வரவேற்றனர்.
சுவாமி ஆலயத்தை வலம் வந்து விசேட பூஜையில் கலந்து கொண்டார்.
சுவாமி
அக்ஷராத்மாநந்தா ஜீ மகராஜ் அங்கு அருளுரை யாற்றினார். அவருக்கு
ஆலயவரலாற்று ஆவணமான மரகதம் நூல் தலைவரால் வழங்கி வைக்கப்பட்டது.
அன்றைய அன்னதான நிகழ்வையும் சுவாமி ஆரம்பித்து வைத்தார்.
இரண்டாவது அலங்கார உற்சவம் புதுவருடத்தில் 14 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகியது .
உற்சவகால
பிரதம குரு சிவாகமவித்யா பூஷணம் சிவஸ்ரீ சண்முக மகேஸ்வர குருக்கள்
தலைமையில் ஆலய குரு சிவஸ்ரீ ச.கோவர்த்தன சர்மா மற்றும் சிவஸ்ரீ
சபாரெத்தினக்குருக்கள்சமுகத்தி ல் வருஷாபிஷேக கிரியைகள் யாவும் நடைபெற்று வருகின்றன.
Post A Comment:
0 comments so far,add yours