( வி.ரி.சகாதேவராஜா)
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் ., கலாநிதி பட்டம் பெற்ற முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறிலை அவரது காரைதீவு வீட்டுக்கு சென்று பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
அவருடன் வருகைதந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கவீந்திரன் கோடீஸ்வரன், பா.அரியநேந்திரன், சீ.யோகேஸ்வரன் உள்ளிட்ட பிரமுகர்களும்,  இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச தலைவரும்,
காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலயத்தின் தலைவருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறிலை பாராட்டி கௌரவித்தனர்.

மறைந்த சேவையின் சிகரம் கப்டன் விஜய்காந்த் திருவுருவப் படம் முன்னிலையில் இக்கௌரவிப்பு இடம் பெற்றது.

 
 இந்நிகழ்வில் தலைவர் சிவஞானம் சிறீதரன் உரையாற்றுகையில்..
12 சர்வதேச பல்கலைக்கழகங்களும் உலகத்தமிழ் பல்கலைக்கழகம் இணைந்து இவருக்கான கலாநிதி பட்டம் வழங்கியமை எமது பிரதேசத்துக்கு மாத்திரமல்ல அனைத்து தமிழ் மக்களினுடைய சந்தோசமாகும்.  என்றார்.

 இளம் வயதிலிருந்தே அவர் பல்வேறுபட்ட சமூக சமய செயல்பாடுகளையும் செய்து வருகின்ற விடயம் அனைவருக்கும் தெரியும் அதன் அங்கீகாரமாகவே கலாநிதி பட்டம் அவருக்கு வழங்கப்பட்டிருக்கின்றது பொருத்தமானவருக்கான இந்த பட்டம் வழங்கப்பட்டிருப்பது எமது அங்கத்தவர்களிடையே மிகவும் மகிழ்வையும் சந்தோஷத்தையும் தருகிறது எனவும் கூறினார்.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours