கமல்

கோட்டைக்கல்லாறு பிறண்சிப் விளையாட்டு கழகம் நடத்திய இருபத்தி எட்டாவது கலாசார விளையாட்டு விழா கோட்டைக்கல்லாறு பொது விளையாட்டு மைதானத்தில் சிதம்பரப்பிள்ளை விஸ்வராசா தலைமையில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

இவ் விளையாட்டு விழாவில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே. முரளிதரன் அவர்களும் சிறப்பு அதிதிகளாக மண்முனை தென்னருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம், கருவாஞ்சிகுடி பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜானக ஜெயரத்தின, கருவாஞ்சைக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.ரீ.அபயவிக்ரம, மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன், அக் கட்சியின் தேசிய அமைப்பாளர் ஜீவராசா, பிரதிப் பிரதம செயலாளர் பொறியியல் சேவைகள் அமைச்சு கிழக்கு மாகாணம் ரீ.பாஸ்கரதாஸ், மற்றும் பிரதேச சபை முன்னாள் உறுப்பினர்கள் கிராமம் சார் ஆலய வண்ணக்கர்கள், கல்விமான்கள் என பலரும் கலந்து கொண்டனர் 
இக் கலாசார விளையாட்டு விழாவில் கலாசார பண்பாட்டு அம்சங்களை பிரதிபலிக்கும் விளையாட்டுக்களான கிடுபின்னல், தேங்காய் துருவல், தலையைணைச் சமர்,சறுக்கு கம்பம் ஏறுதல், அலங்கார பானை உடைத்தல், தேசிக்காய் ஓட்டம், போன்ற பல போட்டிகள் நடத்தப்பட்டன இதில் ஆண் பெண் இருபாலரும் மிகவும் உற்சாகத்துடன் ஆர்வத்துடனும் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு பெறுமதி மிக்க பரிசில்கள் வழங்கப்பட்டன. இது மாத்திரமின்றி கிராமத்தில் இருந்து தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை சித்தி பெற்ற மாணவர்கள், சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்று சித்தி பெற்ற மாணவர்கள், உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்று பல்கலைக் கழகத்திற்கு தெரி வாகிய மாணவர்களுக்கும் நினைவு சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர் 






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours