மட்டக்களப்பு மாவட்ட மக்கள் கல்வியில் மாத்திரமின்றி தற்போது விளையாட்டிலும் பழைய கலாச்சார விடயங்களை பேணி பாதுகாக்கின்ற விடயங்களிலும் இன்று முன்னோக்கி சென்று கொண்டிருக்கின்றார்கள் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜே.ஜே.முரளிதரன் அவர்கள் தெரிவித்தார்.
கோட்டைக்கல்லாறு
பிறண்சிப் விளையாட்டு கழகம் நடத்திய இருபத்தி ஏழாவது கலாசார விளையாட்டு
விழா கோட்டைக்கல்லாறு பொது விளையாட்டு மைதானத்தில் சிதம்பரப்பிள்ளை
விஸ்வராசா தலைமையில் மிகவும் கோலாகலமாக 26.05.2024 அல்லது ஞாயிற்றுக்கிழமை
நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே
அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் .
விளையாட்டின்
ஊடாக சிறந்த தலைமைத்தவவ பண்புகளை உருவாக்குவகின்றதன அந்த வகையில் அரசசட்ட
திட்டங்களை மதித்து நடக்க பழகுவதற்கும்,வெற்றி தோல்வியை சமமாக மதிக்கின்ற
மனப்பாங்கு உருவாகுவதற்கும், இதேபோன்று வாழ்விலே ஏற்படுகின்ற வெற்றி
தோல்விகளையும் சமனாக மதித்து பழகுகின்ற தன்மை போன்ற பண்புகள் உருவாகுவது
மாத்திரமின்றி இளைஞர்கள் மத்தியில் உடல் வலிமை மனவலிமைகளுடன் கூடிய ஆளுமையை
விருத்தி செய்வதற்கு விளையாட்டானது இன்றியமையாததாக அமைகிறது.
அந்த
வகையில் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் கல்வியில் மாத்திரமல்ல தற்போது
விளையாட்டிலும் பழைய கலாச்சார விடயங்களையும் பேணி பாதுக்கின்ற
விடயங்களிலும் இன்று முன்னோக்கி சென்று கொண்டிருக்கின்றார்கள். இதற்கு
எடுத்துக்காட்டாக மாகாண மட்டம் தேசிய மட்டும் என பல சாதனைகளைப்படைத்து
தற்போது சர்வதேச மட்டத்திலும் சாதனை படைப்பதற்காக விளையாட்டு விடயங்களில்
தங்களை தயார் படுத்திக் கொண்டிருக்கின்ற நிலைமை இங்கிருக்கின்றது. எனவே
இங்கே விளையாடும் பிள்ளைகள் கூட என்றோ ஒருநாள் எமது நாட்டுக்காகவும்
விளையாட கூடும் இதற்காகவாறான விளையாட்டு நிகழ்வுகளை நடத்துகின்ற இளைஞர்களை
நான் பாராட்டுகிறேன். என அவர் இதன் போது தெரிவித்தார்.......
Post A Comment:
0 comments so far,add yours