52 நாட்களாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான நிருவாக அடக்குமுறைகளை கண்டித்து பொதுமக்கள் சிவில் அமைப்புக்கள் போராட்டம் நடாத்தி வரும் நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்க அவர்களுடனான சந்திப்புஅம்பாரை மாவட்ட முன்னாள் தமிழ்தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடிஸ்வரன் அவர்களின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் இருந்துவருகின்ற கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பான கோரீக்கைகள் முன்வைக்கப்பட்டதுடன் அதற்கான கணக்காளரை விரைவாக நியமிக்குமாறும் கோரீக்கை விடுக்கப்பட்டது.
.இக்கோரிக்கையினை பிரதமருடன் ஆலோசித்து நடைமுறைப்படுத்துவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார் அதே வேளை ஜனாதிபதி அவர்களது செயலாளரையும் சந்தித்து இவ் விடயம் தொடர்பாக தெளிவுபடுத்pயுள்ளனர்.
அத்தோடு அம்பாரை மாவட்டத்தில் இல்மணைற் அகழ்வுதொடர்பான பிரச்சினையும் முன்வைக்கப்பட்டிருந்தது. இதற்கான தீர்வீனையும் வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்இச்சந்திப்பில் கல்முனை மாணவமீட்புப் பேரவையின் தலைவர் கலாநீதி பொறியியலாளர் எஸ்.கணேஸ் மன்னார் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் முன்னாள் மாநகரசபை உறுப்பினர் சிவலிங்கம் ஆலையடி வேம்பின் பிரதேசசபைத்தலைவர் ஜெகநாதன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்;
Post A Comment:
0 comments so far,add yours