(அஸ்ஹர் இப்றாஹிம்)
கல்முனைக் கல்வி வலயத்தில் ஐந்தாம் தர புலமைப் பரிசில் அடைவு மட்டத்தினை அதிகரிக்கும் நோக்குடன் நடாத்தப்பட்ட வலய மட்டத்திலான பரீடசை தொடர்பாக சாய்ந்தமருது,நிந்தவூர் மற்றும் காரைதீவு கோட்ட அதிபர் ஆசிரியர்களுக்கான மீளாய்வுக் கூட்டம் கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது.
கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்..சஹுதுல் நஜீம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் திருமதி எஸ்.குலேந்திரகுமார் கலந்து கொண்டு ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பான அடைவு மட்டத்தினை அதிகரிப்பதற்கு மாகாண மட்டத்தில் எதிர்காலத்தில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள செயற்பாடுகள் தொடர்பாகவும் இவ்விடயம் தொடர்பாக அதிபர் ,ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாகவும் விளக்கிக் கூறினார்.
Post A Comment:
0 comments so far,add yours