சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் டாக்டர். எஸ் எம் எம்.
உமர் மௌலானா இன்று (10) வெள்ளிக்கிழமை காலமானார் .
மருதமுனையைச் சேர்ந்த பணிப்பாளர் உமர் மௌலானா திடீர் சுகவீனமுற்று
கடந்த
ஒரு சில தினங்களாக கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த
வேளையில் இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் பனிரெண்டு மணி அளவில் காலமானார்.
டாக்டர் உமர் மௌலானா 1984 இல் ஆசிரியராக நியமனம் பெற்று அதிபராக பிரதிக் கல்விப் பணிப்பாளராக சேவையாற்றி வந்தார்.
2007 இல் இலங்கை கல்வி நிர்வாக சேவையில் இணைந்து கொண்டார்.
மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியின் அதிபராக சீரிய சேவையாற்றியிருந்தார்.
சம்மாந்துறை வலயக்கல்விப் பணிமனையின் ஒன்பதாவது பணிப்பாளராக 20.01. 2023 சேவையில் இணைந்தார் .
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 60 வயதில் ஓய்வு பெறவிருந்தார்.
சம்மாந்துறை வலயத்தில் 15 மாதங்கள் கடமையாற்றி வந்தவேளையில் இன்று இம் மரணம் சம்பவித்திருக்கின்றது.
சம்மாந்துறை
வலய கல்வி அதிகாரிகள் அதிபர்கள் ஆசிரியர்கள் கல்விசார் கவ்வி சாரா
ஊழியர்கள் மாணவர் அனைவரும் தமது அனுதாபங்களை தெரிவித்து வருகிறார்கள்.
Post A Comment:
0 comments so far,add yours