கல்முனை
நீதிவான் நீதிமன்ற நியாயாதிக்கத்திற்கு உட்பட்ட பிரதேசத்தில்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடாத்த ஐவருக்கு கல்முனை நீதிவான்
நீதிமன்றினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
15 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரையான காலப்பகுதியில் நினைவேந்தலை நடாத்துவதற்கு இத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இலங்கை
தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச தலைவரும் முன்னாள் தவிசாளருமான
கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில், சமுக செயற்பாட்டாளர்களான பாண்டிருப்பு தாமோதரம்
பிரதீபன்,
தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின்
மாவட்ட அமைப்பாளர் புஸ்பராஜ் துஷானந்தன் , காரைதீவு வினாயகம் விமலநாதன்
மற்றும் திருக்கோவில் த.செல்வராணி ஆகியோருக்கு இத் தடையுத்தரவு
பிறப்பிக்கப்பட்டது.
இலங்கை
தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச தலைவரும் முன்னாள் தவிசாளருமான
கிருஷ்ணபிள்ளை ஜெயசிறிலுக்கான இத் தடையுத்தரவை காரைதீவு போலிசார் பொலீஸ்
நிலையத்தில் வழங்கினர்.
பெரியநீலாவணை
பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே.வீரசிங்க
கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவையடுத்து இத் தடை
உத்தரவு நீதிவானால் பிறப்பிக்கப்பட்டது .
இதேவேளை
அம்பாறை பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாண்டிருப்பு
பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்க முற்பட்டவர்களை தடுப்பதற்கு
நூற்றுக்கணக்கான பொலிஸார் குவிக்கப்பட்டு தடுத்து நிறுத்த பட்ட
குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (14) காலை எட்டு முப்பது மணிக்கு இடம்பெற்றுள்ளமை தெரிந்ததே.
Post A Comment:
0 comments so far,add yours