(எஸ்.அஷ்ரப்கான்)


மாஸ்டர் தடகள சாம்பியன்ஷிப் - 2024 போட்டியில் சிரேஸ்ட உடற்கல்வி ஆசிரியர் றிஸ்மி மஜீட்  வெள்ளி வெண்கலப் பதக்கங்கள் வென்றார்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் தங்கப் பதக்கத்தினை தனதாக்கிக் கொண்ட கல்முனை அல்- மிஸ்பாஹ் பாடசாலையின் சிரேஸ்ட உடற்கல்வி ஆசிரியர் றிஸ்மி மஜீத்  மீண்டும் நடைபெற்று முடிந்த 37 வது வருடத்த மாஸ்டர் (திறந்த) சம்பியன்ஸிப் - 2024 போட்டியில் 100 மீற்றர் ஹேடில்ஸ் (ர்ரசனடநள) போட்டியில்  வெள்ளிப் பதக்கத்தினையும் உயரம் பாய்தலில் வெண்கலப் பதக்கத்தினையும் தனதாக்கிக் கொண்டுள்ளார்.

இதேவேளை கடந்த வருடம்

மாஸ்டர் தடகள சாம்பியன்ஷிப் - 2023 போட்டியிலும் இவர்  400 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் பங்கு பற்றி மூன்றாமிடம் பெற்று வெண்கலப் பதக்கத்தை தனதாக்கிக் கொண்டார்.

கடந்த வருடம் 15.07.2023இ16.07.2023 ஆம் திகதிகளில் அனுராதபுர பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் பங்குயிருந்ததோடுஇ இவர் மிகச் சிறப்பாக தனது திறமையை வெளிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவரை பாராட்டி பலரும் நினைவுச் சின்னம் வழங்கி கெளரவித்து வரும் நிலையில் கல்முனை அல் - மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்துக்கு கடந்த வாரம் வருகை தந்த இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் ரொஷான் மஹானாமவினால் இவ்வாசிரியர் பாராட்டி கௌரவிக்கப்பட்டதோடு  பாடசாலையின் அதிபர்இ பிரதி அதிபர்இ உதவி அதிபர்இ விளையாட்டு ஆசிரியர்கள் பாடசாலை மாணவர்களினாலும் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours