( வி.ரி. சகாதேவராஜா)
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளார் பிறந்த காரைதீவு இல்லத்தை முதல் தடவையாக யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து சந்நதி கதிர்காம பாதயாத்திரை  குழுவினர் தரிசித்தனர்.

 பாதயாத்திரை குழுவின் தலைவர் ஜெயா வேல்சாமி சுவாமிகளின் திருவுருவச்சிலைக்கு அருகில் தமது பிரதானவேலை வைத்து வணங்கினார்.
பின்னர் பஞ்சாராத்தி காட்டி ஆராதனையில் ஈடுபட்டார்கள். அனைத்து அடியார்களும் அங்கு பக்தி பரவசமாக சுவாமியை வழிபட்டார்கள் 

 சுவாமியை பிறந்த இல்லத்தை பார்வையிட்டு சில நிமிட நேரம் மணிமண்டபத்தில் தரித்து சென்றார்கள்.

 வாழ்க்கையில் முதல் தடவையாக ஒரு பெருந் துறவியின் இல்லத்தை அவரது துறவற நூற்றாண்டு விழா காலத்தில் பார்க்க நேர்ந்தமை எமது யாத்திரையில் கிடைத்த ஒரு பேறு என்று அடியார்கள் தெரிவித்தார்கள்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours