(பாறுக் ஷிஹான்)
ஐஸ் போதைப்பொருளை நீண்ட காலமாக விற்பனை செய்து வந்த முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரின் மகனை 72 மணித்தியாலங்கள் தடுப்புக்காவலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
குறித்த கைது செய்யப்பட்ட நபர் வசம் இருந்து 5 கிராம் 80 மில்லி கிராம் பெறுமதியுடைய ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரின் தந்தை ஒய்வு பெற்ற முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தராவார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வியாழக்கிழமை(20) கல்முனை தலைமையக பொலிஸாரிடம் விசேட அதிரடிப்படையினர் சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டார்.இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட சந்தேக நபரை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து 72 மணித்தியாலங்கள் சந்தேக நபரை தடுத்துவைத்து விசாரணை மேற்கொள்ளுமாறு நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
மேலும் குறித்த சந்தேக நபர் கடந்த காலங்களில் பல்வேறு போதைப்பொருளுடன் பல தடவை கைதாகி பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours