( வி.ரி.சகாதேவராஜா)

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் சந்நதி- கதிர்காம ஜெயாவேல்சாமி தலைமையிலான பாதயாத்திரை குழுவினருக்கு  திருகோணமலை கோபாலபுரத்தில் கோலாகலமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
கோபாலபுரம்  தமிழ் வித்தியாலய அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் மகத்தான வரவேற்பை வழங்கினார்கள்.

கோபாலபுரத்தை சேர்ந்த சுவிட்சர்லாந்தில் வாழும் ஆசிரியை திருமதி விஜயகுமாரி மகேஸ்வரன் அனுசரணை வழங்கினார்.

நேற்றுமுன்தினம் நிலாவெளியில் தங்கிய அவர்கள் நேற்று(30) திருகோணமலையை அடைந்தனர்.

 
 கடந்த 11ஆம் தேதி யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து ஆரம்பித்த இந்த பாதயாத்திரை நேற்று 20-வது தினமாக சிறப்பாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

 கதிர்காம பாதயாத்திரை பேரவையின் தலைவர்  ஜெயாவேல்சாமி தலைமையில் இந்த குழுவினர் வந்து கொண்டிருக்கின்றார்கள் .

மொத்தமாக 89 அடியார்கள் இந்த பாதயாத்திரை குழுவில் இடம் பெற்றிருக்கிறார்கள். 




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours