சம்மாந்துறை கல்விவலயத்திற்குட்பட்ட வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலயத்தில் CDB  நிதி நிறுவனத்தி முழு அணுசரணையில் 44 இலட்சம் ரூபா பெறுமதியான நவீன வசதிகளுடன் கூடிய புதிய கணினி ஆய்வுகூடம் அமைக்கப்பட்டு திறந்துவைக்கும் நிகழ்வு வியாழக்கிழமை அதிபர் க.தியாகராஜா தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அகதியாக CDB  நிதி நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று முகாமையாளர் மகேஷ் நாணயக்கார உட்பட்ட நிறைவேற்று முகாமைத்துவக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அதிதிகளாக சம்மாந்துறை கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப்பணிப்பாளர்களான பி.பரமதயாளன், ஏ.சி.என்.நிலோபரா, ஏ.எம்.சியாத், என்எம்.நசீர் அலி ஆகியோரும்

வேப்பையடி 16 வது படைப்பிரிவு முகாமின் லெப்டினன் ரணவீர மற்றும் ஆசிரிய ஆலோசகர் சா.மோகன். பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கச்செயலாளர் கு.மதிவண்ணன் மற்றும் பழைய மாணவர் சங்கச் செயலாளர் சி.சனோஜன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.















Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours