( வி.ரி.சகாதேவராஜா)
சம்மாந்துறை
ஆதார வைத்தியசாலையின் புதிய வைத்திய அத்தியட்சகராக காரைதீவைச் சேர்ந்த
வைத்திய கலாநிதி டாக்டர் தர்மலிங்கம் பிரபாசங்கர் சுகாதார அமைச்சினால்
நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் இன்று (6) வியாழக்கிழமை அங்கு சென்று கடமையை பொறுப்பேற்றுள்ளார்.
பதில் வைத்திய அத்தியட்சகராகவிருந்த மகப்பேறு வைத்திய நிபுணர் டாக்டர் ரொகானிடமிருந்து ஆவணங்களை பெற்றுக் கொண்டார்.
வைத்தியசாலை அபிவிருத்திக் குழு வாழ்த்தி வரவேற்றது
இவர்
கடந்த இரண்டு வருட காலமாக கொழும்பு பல்கலைக்கழகத்தில் பட்டப் பின்
நிருவாக முதுவிஞ்ஞானமாணி பயிற்சி நெறியை மேற்கொண்டிருந்தார் .
இவ்
விதம் இரு வருட கால பயிற்சியை முடித்த 23 பேருக்கு நேற்று புதன்கிழமை
சுகாதார அமைச்சு வைத்து நாட்டில் உள்ள பெரும் வைத்தியசாலைகளுக்கு நியமனம்
கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
காரைதீவைச்
சேர்ந்த வைத்திய கலாநிதி டாக்டர் பிரபாசங்கர் முன்னதாக ஆரையம்பதி பிரதேச
சுகாதார வைத்திய. அதிகாரியாக கடமையாற்றி இருந்தார்.
இருவருட
வைத்திய நிருவாக துறை பட்டப்பின் பயிற்சி முடித்து வைத்திய அத்தியட்சகராக
தெரிவாகிய முதல் காரைதீவு வைத்தியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours