( வி.ரி.சகாதேவராஜா)


 வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் ஆடிவேல் விழா உற்சவத்தையொட்டிய கதிர்காமத்துக்கான காட்டுப்பாதை   இன்று (30) ஞாயிற்றுக்கிழமை  மரபு ரீதியாக திறந்து வைக்கப்படவுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பூநாடா வெட்டி கானகப் பாதைக்கான கதவை உத்தியோகபூர்வமாக திறந்துவைப்பார்.

வரலாறு காணாத வகையில் இம்முறை சுமார் 5000 க்கு மேற்பட்ட அடியார்கள் முதல் தடவையாக முதல் நாளிலேயே காட்டுக்குள் பிரவேசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 இந்து சமய கலாசார முறைப்படி மூன்றாவது தடவையாக 
 கழுகுமலைப் பத்து பாடி  கானகப்பாதைக் கதவு திறந்து வைக்கப்படவுள்ளது.

 அதிகாலை 5.30 மணிக்கு உகந்தை மலை முருகன் ஆலயத்தில் பிரதம குரு சிவ ஸ்ரீ  க.கு. சீதாராம் குருக்கள் விசேட பூஜை நடாத்தி ஆசியுரை வழங்கியதை எடுத்து
  காலை 7 மணியளவில்  குமண சரணாலய நுழைவாயிலில் காட்டுப் பாதை சம்பிரதாய பூர்வமாக திறக்கப்படும்.

அதன் பின்னர் அடியார்கள் கானக பாதயாத்திரையை மேற்கோள்வார்கள்.

 அவ்வமயம் , அம்பாறை மாவட்ட  அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம,மேலதிக அரசாங்க  அதிபர் சிவ.ஜெகராஜன் உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள்.

யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து ஆரம்பித்த சி.ஜெயராசா( ஜெயா வேல்சாமி) தலைமையிலான 56 நாள் மிகநீண்ட பாதயாத்திரை அடியார்கள் உள்ளிட்ட 4 ஆயிரம் அடியார்கள் தற்போது உகந்தைமலை முருகன் ஆலயத்தில் தங்கியுள்ளனர்.

கதிர்காம காட்டுப் பாதை மொத்தம் 56 மைல்கள் ஆகும்.

உகந்தையிலிருந்து ஐந்து மைல்தூரத்தில் வாகூரவட்டை .பின்பு 7 மைல் தூரத்தில் குமுக்கனாறு. 12 மைல் தூரத்தில் நாவலடி. பின்னர் 11 மைல் தூரத்தில் வியாழை. 6 மைல் தூரத்தில் வள்ளி அம்மன் ஆறு. 8 மைல் தூரத்தில் கட்டகாமம். அடுத்து 8 மைல் தூரத்தில் கதிர்காமம் மொத்தமாக காட்டுப்பாதை 56 மைல்களை உள்ளடக்கியது .

சுமார் 6 நாட்கள் இந்த காட்டுப் பயணத்தை அடியார்கள் மேற்கொள்வது வழமை.

 நேற்று 30 ஆம் தேதி திறந்து வைக்கப்பட்ட காட்டுப் பாதை யூலை 11 ஆம் தேதி மூடப்படுகிறது.

கதிர்காம கொடியேற்றம் 06ஆம் திகதி நடைபெற இருக்கின்றது . யூலை மாதம் 22ஆம் திகதி தீர்த்தம் இடம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours